கொல்லத்தில்..
கேரள மாநிலம் கொல்லத்தில் டியூஷனுக்குச் சென்ற 6 வயது சிறுமி கடத்தப்பட்டுள்ளார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த சிறுமி ஆயூரைச் சேர்ந்த ரெஜியின் மகள் என தெரிய வந்துள்ளது. காவல்துறையில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை கிடைத்த தகவலின் படி சிறுமியை கடத்தியவர்கள் வெள்ளை நிற ஹோண்டா அமேஸ் காரில் வந்தனர்.
திங்கட்கிழமை மாலை சிறுமி தனது மூத்த சகோதரன் ஜோனத்தனுடன் டியூஷனுக்குச் சென்றுகொண்டிருந்தார். அப்போது இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
காரில் 3 ஆண்கள் மற்றும் ஒரு பெண் உட்பட 4 பேர் இருந்ததாக சிறுமியின் அண்ணன் ஜோனத்தன் காவல்துறையினரிடம் கூறினார். காரில் இருந்தவர்கள் தாயிடம் கொடுக்கச் சொல்லி தன்னிடம் ஒரு பேப்பரைத் தந்துவிட்டு, சகோதரியைக் கடத்திச் சென்று விட்டதாக கூறினார்.
ஜோனத்தன் கடத்தல்காரர்களைத் தடுக்க முயற்சித்தார். அவரை தள்ளிவிட்டு கார் நகர ஆரம்பித்து விட்டதாக சகோதரர் கூறியுள்ளார். கார் தட்டி அவர் கீழே விழுந்துள்ளார். இதனை அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார் அறிந்துள்ளனர்.
அதே நேரத்தில் வீடியோவில் காரின் நம்பர் பிளேட்டில் உள்ள எண் தெளிவாக இல்லை. கார் திருவனந்தபுரத்தில் பதிவு செய்யப்பட்டது . ஒரு வேளை அந்த காரின் நம்பர் போலியானதாகவும் இருக்கலாம் என காவல்துறையினர் கருதுகின்றனர்.
பின்னர், கடத்தல் கும்பல் குழந்தையின் தாயை அழைத்து சிறுமியை விடுவிக்க ரூ.5 லட்சம் கேட்டுள்ளனர். கொல்லம் நகரம் மற்றும் அதன் சுற்றுப்புற சிறுமியைப் பற்றிய தகவல் கிடைத்தால் உடனடியாக காவல்நிலையத்துக்கு தெரிவிக்கலாம் என கிராமப் பஞ்சாயத்து மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி உதவி எண்கள் 9946923282, 9495578999