காதலியை ஏமாற்றிவிட்டு தலைமறைவான காதலன்.. போராடி காவல் நிலையத்தில் திருமணம் செய்த காதலி!!

401

சென்னையில்..

காதலியை கர்பபமாக்கி விட்டு தலைமறைவான காதலனை அழைத்து காதலியுடன் காவல்நிலையத்தில் திருமணம் செய்து வைத்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. சென்னை இராயபுரத்தைச் சேர்ந்தவர் கலைவாணி(வயது 20) . இவர் பெற்றோர்களை இழந்து தனது அக்கா வீட்டில் வசித்து வருகிறார்.

இவர் துரைப்பாக்கம் பகுதியில் ஆர்கிடேக் நிறுவனத்தில் பணி புரிந்து வந்துள்ளார். இதே நிறுவனத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சஜின்ராஜ்ம்(27) பணி பரிந்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் கடந்த 1.5 வருடங்களாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் கலைவாணி கர்ப்பம் அடைந்துள்ளார். இதனை சஜினிடம் தெரிவித்த நிலையில், கர்ப்பத்தை கலைத்தால் மட்டுமே வீட்டில் திருமணம் குறித்து பேசலாம் எனவே கர்ப்பத்தை கலைத்துவிடுமாறு தெரிவித்துள்ளார். இதனை நம்பி கலைவாணியும் கருக்கலைப்பு செய்துள்ளார்.

இதனையடுத்து மதம் காரணமாக காதலனின் பெற்றோர் மறுப்பதாகவும், இதனால் திருமணம் செய்து கொள்ள சஜின்ராஜ் மறுத்துள்ளார். இதன் காரணமாக கலைவாணி வீட்டில் இருந்த மாத்திரைகளை உட்கொண்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து இராயபுரம் காவல் நிலையத்தில் கலைவாணி தற்கொலைக்கு முயன்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து தலைமறைவாக இருந்த காதலன் கொடைக்கானலில் இருப்பதாக தெரிய வந்துள்ளது.

இது குறித்து கலைவாணி கொடைக்கானல் மகளிர் காவல் நிலையத்தில் திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதாக புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர் காதலனை அழைத்து விசாரணை மேற்கொண்டனர்.

இதனையடுத்து இருவரும் சமரசமாக திருமணம் செய்து கொள்கிறோம் என இருவீட்டார் தெரிவித்ததை அடுத்து காவல் நிலைய வளாகத்திற்குள் ஒருவொருக்கொருவர் மாலை மாற்றி கொண்டு, தாலி கட்டிக்கொண்டு திருமணம் செய்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து இருவீட்டாரும் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்று கொண்டனர்.