மலேசிய விமானத்தின் தேடுதல் வேட்டை 10 ஆண்டுகளைத் தாண்டும்!!

589

A

மாயமான மலேசிய விமானத்தை தேட பத்தாண்டுகள் ஆகும் என அந்நிறுவத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கடந்த மார்ச் 8ம் திகதி கோலாலம்பூரில் இருந்து 239 பயணிகளுடன் பிஜீங் சென்ற MH370 விமானம் திடீரென நடுவானில் மாயமானது.

இதனையடுத்து இந்திய பெருங்கடலில் விழுந்ததாக மலேசிய அரசு கூறியதன் பேரில் சர்வதேச நாடுகளான அமெரிக்க, பிரிட்டன், அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் பூளூபென் நீர்மூழ்கி கப்பலின் மூலம் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது. ஆனால் அங்கு விழுந்தது ஏதும் விமானத்தின் பாகங்கள் இல்லை என பின்பு உறுதி செய்யப்பட்டது.

தற்போது இந்த விவகாரம் தொடர்பாக மலேசிய விமானத்துறையின் அதிகாரி டன்லெவி கூறியதாவது, மாயமான விமானம் பற்றி அதிகாரிகளால் கண்டுபிடிக்கமுடியாததும், மலேசிய அரசு இவ்வாறு மெளனம் காப்பதும் ஏன் என எனக்கு புரியவில்லை என தெரிவித்துள்ளார்.

மேலும் விமானம் கடலில் விழுந்தது என்றால் அதன் பாகங்கள் பெரிய பகுதியில் சிதறிக் கிடக்கலாம் என்றும் கடலில் மலைகள் உள்ளதால் விமானத்தை தேட பத்தாண்டுகள் ஆகலாம் எனவும் கூறியுள்ளார்.

620-100 Final