ஒபாமாவை முந்தும் மோடி!!

440

Modi

ட்விட்டரில் அமெரிக்க அதிபர் ஒபாமாவை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி முந்தியுள்ளார். ட்விட்டரில் உள்ள தலைவர்களில் அமெரிக்க அதிபர் ஒபாமாவைப் பின்தொடர்பவர்கள் எண்ணிக்கையே இதுவரை அதிகமாக இருந்து வருகிறது.

ஆனால் அவரை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விரைவில் மிஞ்சிவிடுவார் என்று ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

பர்சன் மார்ஸ்டெல்லர் என்ற குளோபல் பப்ளிக் ரிலேஷன்ஸ் மற்றும் கம்யூனிகேஷன்ஸ் என்ற நிறுவனம் தனது ஆய்வில் இதனைத் தெரிவித்துள்ளது.

ட்விட்டர் என்ற நுண்வலைப்பதிவு தளத்தில் அதிக நபர்கள் பின் தொடரும் உலகத் தலைவர்கள் பட்டியலில் அதிபர் ஒபாமா முதலிடம் வகிக்கிறார். 5வது இடத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளார்.

மோடியைப் பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை 49,56,244, அமெரிக்க அதிபர் ஒபாமாவைப் பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை 49,73,061. ஆகவே இடைவெளி குறைந்து வருவதால் விரைவில் நரேந்திர மோடியை பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை ஒபாமாவைக் கடந்து சென்று முதலிடம் வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2014 தேர்தல்களுக்குப் பிறகு மோடியின் புகழ் ட்விட்டரில் அதிகரித்துள்ளது. எனவேதான், துருக்கி அதிபர் மற்றும் பிரதமர் ஆகியோரைப் பின்னுக்குத் தள்ளி மோடி 5வது இடத்திற்குத் தாவியுள்ளார்.

ட்விட்டர் கணக்கில் யார் முன்னிலை என்பது ஒரு தேசத்தின் பெருமிதமாகவே பார்க்கப்படுவதாக இந்த ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

620-100 Final