பிரதமர் மோடியின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

987

Modi1

இந்திய பிரதமர் மோடியின் சம்பளம் பற்றிய விவரங்கள் வெளியாகியுள்ளது. உலக நாடுகளில் அதிக வேலைப்பளு கொண்ட இந்தியப் பிரதமருக்குத்தான், குறைந்த சம்பளம் என்று புள்ளிவிவரங்கள் நிரூபிக்கின்றன.

இந்தியப் பிரதமருக்கு மாதம் 50 ஆயிரம் அடிப்படைச் சம்பளம், இது தவிர செலவினங்கள் படி, தினசரி படி மற்றும் அலுவலகப் படி உள்பட மொத்தம் மாதத்திற்கு 1 லட்சத்து 60 ஆயிரம் வழங்கப்படுகிறது.

மேலும் பிரதமரின் உபயோகத்திற்கு கறுப்பு நிற பி.எம்.டபிள்யூ 7 வரிசை கார் அதிகபட்ச பாதுகாப்போடு வழங்கப்படுகிறது. இந்த கார் குண்டு துளைக்காத வகையிலும் வெப்பத்தைத் தாங்கக்கூடிய வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், பிரதமர் ஓய்வு பெற்றதும் மாதம் 20,000 ஓய்வு ஊதியம் உண்டு. ஓய்வூதியம் குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை திருத்தி அமைக்கப்படும்.

டெல்லியில் வாழ்நாள் முழுவதும் தங்குவதற்கு வீட்டு வசதி செய்து தரப்படும். அந்த வீட்டுக்கு வாடகை, மின் கட்டணம், குடிநீர் வரி என எதுவும் விதிக்கப்பட மாட்டாது.

மேலும் ஐந்தாண்டுகளுக்கு முழு அலுவலகச் செலவுகள் வழங்கப்படும் என்றும், பிறகு இது ஆண்டுக்கு 6000 ஆக குறைக்கப்படும் எனவும் தெரியவந்துள்ளது.

 

620-100 Final