வீதி விபத்தில் ஒருவர் பலி, நால்வர் வைத்தியசாலையில் அனுமதி!!

1124

விபத்து..

காலி – கொழும்பு பிரதான வீதியில் அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் சிறிய ரக லொறி ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நால்வர் காயமடைந்துள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் காயமடைந்த நால்வரும் பலப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மொரட்டுவையில் கட்டடமொன்றில் வேலை செய்துவிட்டு பத்தேகம நோக்கிச்சென்று கொண்டிருந்த குழுவினரே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளனர்.

வாகன சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை களக்கம் காரணமாகவே லொறி சாலையை விட்டு விலகி கொன்கிரீட் சுவரொன்றில் மோதியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த விபத்தில் லொறியின் பின் பக்கத்தில் பயணித்தவர்களில் ஒருவர் பலத்த காயங்களுக்குள்ளாகி பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.