பேரறிவாளன் உட்பட்ட 7 பேர் விடுதலைக்கு எதிரான வழக்கு ஜூலை 7ம் திகதி விசாரணை!!

407

Rajiv

பேரறிவாளன் உட்பட்ட 7 பேர் விடுதலைக்கு எதிரான வழக்கு ஜூலை 7ஆம் தேதி விசாரணை நடத்தப்படும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு விதிக்கப்பட்டிருந்த தூக்குத் தண்டனையை உச்ச நீதிமன்றம் ஆயுள் தண்டனையாக குறைத்ததோடு, அவர்களை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசு முடிவு செய்யலாம் என்றும் தீர்ப்பளித்தது.

இதையடுத்து, பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை செய்யப்படுவார்கள் என்று முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு கடந்த காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

அதோடு 7 பேர் விடுதலையை எதிர்த்து மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான அமர்வு, இந்த வழக்கை அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என்று தீர்ப்பளித்தது.

இந்நிலையில், பேரறிவாளன் உட்பட்ட 7 பேர் விடுதலைக்கு எதிரான வழக்கு மீது ஜூலை 7ம் திகதி விசாரணை நடத்தப்படும் என்றும், வழக்கை 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என்றும் உச்ச நீதிமன்றம் இன்று வெியாழக்கிழமை அறிவித்துள்ளது.
620-100 Final