அசானி தொடர்பில் நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ள கருத்து : பலரும் விசனம்!!

8219

அசானி..

இந்திய பிரபல தொலைக்காட்சியான ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சரிகமப நிகழ்ச்சியில் மலையகச் சிறுமி அசானி பங்கேற்று வருகிறார். மலையகச் சிறுமியான அசானி தொடர்பில் நடிகர் சத்தியராஜ் கருத்து தெரிவிக்கையில் மலையக தமிழர்களுக்கு இன்னும் குடியுரிமை வழங்கப்படவில்லை எனக் குறிப்பிட்டிருந்தார்.

இக்கருத்துத் தொடர்பில் நூலுகவாசி ஒருவர் விசனம் தெரிவித்துள்ளார். இலங்கையிலுள்ள மலையகத் தமிழர் அனைவருக்கும் இலங்கை குடியுரிமை வழங்கப்பட்டுவிட்டது.

இலங்கையிலிருந்து மீளவும் இந்தியாவிற்கு சென்ற மலையகத்தவர்களும் ஈழத் தேசத்திலிருந்து அகதிகளாக இந்தியாவிற்கு சென்றவர்களும் மாத்திரமே இன்றுவரை இந்தியாவில் குடியுரிமையற்று வாழ்கின்றனர்.

இந்தியாவில் திரும்பிச்சென்ற முப்பதாயிரம் மலையகத் தமிழர் உட்பட ஒரு இலட்சம் ஈழத்தமிழர்கள் சுமார் 40 வருடகாலமாக அகதிகளாகவே தமிழ்நாட்டில் வைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையிலுள்ள மலையகத்தமிழர்கள் கல்வி கற்று அரச வேலைவாய்ப்புகளைப் பெற்று இலங்கை நாடாளுமன்றிலும் அங்கம் வகிக்கின்றனர்.

ஆனால் தமிழ் நாட்டில் வாழும் இலங்கை அகதிகள் உரிய புள்ளிகளை பெற்றாலும் கூட அரச வேலைகளுக்கோ நாடாளுமன்ற உறுப்பினராகவோ செல்ல முடியாது எனத் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இலங்கை அரசுக்கு மனட்சாட்சி இருந்தால் மலையக தமிழருக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்று அவர் கூறியிருக்கிறார்.

உண்மை என்னவென்றால் அவர் இதை இந்திய அரசைப் பார்த்துதான் கூற வேண்டும் என குறித்த முகநூல் வாசி விசனம் தெரிவித்துள்ளார். மேலும் அசானிக்கு இலங்கைக் குடியுரிமை இருப்பதால்தான் இலங்கை கடவுச்சீட்டு மற்றும் இந்திய விசா பெற்று சரிகமப நிகழ்வில் பங்கேற்க முடிந்தது.