பிரித்தானியாவில் உயிரிழந்த இந்திய மாணவன் : பொலிஸார் வெளியிட்ட தகவல்!!

435


பிரித்தானியாவில்..பிரித்தானியாவில் அண்மையில் சடலமாக மீட்கப்பட்ட இந்திய மாணவன் நதியில் தவறி விழுந்து மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.மேற்படிப்புக்காக பிரித்தானியா சென்ற இந்திய மாணவர் மித்குமார் படேல் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் லண்டன் சென்ற இவர் உறவினர் வீட்டில் தங்கியிருந்த நிலையில் பல்கலைக்கழகத்தில் கல்வியை தொடர்வதற்கு திட்டமிட்டுள்ளார்.இந்நிலையில் கடந்த (17.11.2023)ஆம் திகதி நடைப் பயிற்சிக்கு சென்றபோது அவர் வீடு திரும்பாததால் பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.