திருமணம் நடக்க இருந்த மாப்பிள்ளைக்கு நேர்ந்த சோகம்.. 20 முறை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை!!

614

பெங்களூருவில்..


கர்நாடக மாநிலம் பெங்களூரு பைடராயனபுரா காவல் நிலைய எல்லையில் உள்ள நியூ டிம்பர் லேஅவுட்டில் 24 வயது ஆட்டோ டிரைவர் செவ்வாய்க்கிழமை இரவு வெட்டிக் கொல்லப்பட்டார்.


உயிரிழந்தவர் அருண் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அடையாளம் தெரியாத மர்மநபர்களால் கூரிய ஆயுதங்களால் 20-க்கும் மேற்பட்ட முறை குத்திக்கொலை செய்யப்பட்டார்.

இதுக்குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், ஒரு தாக்குதல் வழக்கில் அருண் 2021ல் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. பழைய முன்விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அறிக்கையின்படி, அருணின் திருமணம் ஜனவரி மாதம் திட்டமிடப்பட்டது.

“அருண் என் அண்ணன் மகன். அவரது தந்தை ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதால் அவர் எனது குடும்பத்துடன் வசித்து வந்தார். அவர் கொலை செய்யப்பட்டதாக இரவு 9:30 மணியளவில் எனக்கு அழைப்பு வந்தது,” என்று அருணின் மாமா குமார் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

இதுகுறித்து தகவலறிந்த பைதரனபுரம் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது