வேறு சாதி நபரை காதலித்த அக்காவை கொலை செய்த 17 வயது தம்பி!!

401


திருநெல்வேலியில்..திருநெல்வேலி மாவட்டம் இராஜவல்லிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆசீர். கூலி தொழில் செய்து வரும் இவருக்கு தங்கத்தாய்(20) என்ற மகள், மகன் (17) உள்ளனர். இந்த நிலையில் மூத்த மகளான தங்கத்தாய் கங்கைகொண்டான் சிப்காட் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார்.அப்போது, அங்கு பணிபுரியும் மாற்று சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை அவர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர்களது காதல் விவகாரம் தங்கத்தாயின் வீட்டிற்கு தெரிய வந்துள்ளது. வீட்டில் உள்ளவர்கள் மற்றும் உறவினர்கள் தங்கத்தாயின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
அதனை எல்லாம் கண்டுக்கொள்ளாமல் தனது காதலில் தங்கத்தாய் உறுதியாக இருந்துள்ளார். இதனைத்தொடர்ந்து நேற்று காலையும் காதல் விவகாரம் தொடர்பாக தங்கத்தாய் வீட்டில் பிரச்சினை வந்துள்ளது.


பின்னர் சண்டை முற்றிய நிலையில் நேற்று இரவு தங்கத்தாயின் சகோதரர் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து தங்கத்தாயை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதனால் நிலை குலைந்து தடுமாறி ரத்த வெள்ளத்தில் தங்கத்தாய் கீழே விழுந்துள்ளார்.

மேலும் தங்கத்தாயின் சகோதரர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். தங்கத்தாய் சம்பவ இடத்திலையே பரிதாபமாக உயிரிழந்தார். இதுக்குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தங்கத்தாயின் சகோதரை போலீசார் தேடி வருகின்றனர்.