வவுனியா பூந்தோட்டம் அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய வருடாந்த பொங்கல் விழா 2014!!(இரண்டாம் இணைப்பு)

288

வவுனியா பூந்தோட்டம் அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய வருடாந்த பொங்கல் விழா நேற்று 28.06.2014 சனிக்கிழமை காலையிலிருந்து மிகவும் கோலாகலமான முறையில் இடம்பெற்றுவருகிறது.

அதிகாலை அபிசேகங்கள் ஆராதனைகளுடன் தொடங்கிய உற்சவம் நள்ளிரவு வரை ஆயிரக்கணக்கான பக்தர் கூட்டத்தின் மத்தியில் பொங்கல் உற்சவம் நிறைவுபெற்றது.

நேற்றைய உற்சவத்தில் நூற்று கணக்கான பக்தர்கள் தங்களது நேர்த்திகடன்களை நிறைவேற்றினர்.நேற்று காலை வவுனியா கந்தசாமி கோவிலில் இருந்து நூற்றுக்கணக்கான பால்காவடிகள் செதில்காவடிகள் மற்றும் தூக்கு காவடிகள் பால்குடபவனி அத்துடன் சின்னமேளம் மயிலாட்டம் ஒயிலாட்டம் என்பவை பிற்பகல் மூன்று மணியளவில் வந்தடைய ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலயத்தை வந்தடைய பகல் உற்சவம் நிறைவு பெற்றது.

மீண்டும் மாலையில் தொடங்கிய உற்சவங்கள் ஒருபுறம் நடைபெற்று கொண்டிருக்கமறுபுறம் கோவிலின் வெளிவீதியில் இரவு எட்டுமணியளவில் விசேடமாக அமைக்கப்பட்ட பிரமாண்டமான மேடையில் உள்ளூர் பாடசாலைகள் மற்றும் நடன பள்ளிகள் அத்துடன் வவுனியா தேசிய கல்வியியல் கல்லூரி மாணவர்கள் ஆகியோரின் பங்களிப்பில் கலை நிகழ்வுகள் இடம்பெற்றன.

ஸ்ரீ இராம சரிதம் சீதாலட்சுமி கல்யாணம், ராமர் வனவாசம் போன்ற நிகழ்வுகளும் நரசிங்க அவதாரம், சிவதாண்டம் முதலியனவும் இடம்பெற்றன.

அத்துடன் நரசிங்க அவதாரம் வில்லுப்பாடல் நிகழ்வும் இடம்பெற்றது. வண்ணமயமான ஆடை அலங்காரங்களுடன் சின்னஞ் சிறுவர்களின் நடனங்கள் பார்ப்பவர்கள் மனதை கொள்ளை கொண்டதாக கொண்டதாக கலந்து கொண்டோர் தெரிவித்தனர்.

நள்ளிரவு பன்னிரெண்டு மணியளவில் வானவேடிக்கைகளுடன் பிரகாசின் பிரமாண்டமான இசை நிகழ்ச்சி தொடங்கி விடியும்வரை இடம்பெற்றது இதில் வன்னி மண்ணில் உருவான பாடகர்களின் பங்களிப்பும் பெருமளவில் காணப்பட்டது.

ஒரேநாளில் எழுதி இசையமைத்து நரசிங்கர் பற்றிய பாடல் ஒன்றும் இசைக்கப்பட்டது.

நேற்று முழுவதும் வன்னி மண்ணில் இருந்து வவுனியா நெற் தனது நேரடி இணைய ஒளிபரப்பு (Live Web Casting) மூலம் சர்வதேசம் எங்கும் வாழும் தனது வாசகர்களுடன் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

-பண்டிதர்-

1 2 3 4 5 6 7 8 9 10