திருமணமாகி 4 வாரம் தான்.. புதுமணப்பெண் எடுத்த விபரீத முடிவு!!

616

கன்னியாகுமரியில்..

திருமணமாகி 4 வாரம் தான் முழுசா முடிச்சிருக்கு. ரெண்டாவது மாதம் நிறைவடைவதற்குள் இளம்மனைவி, வீட்டின் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலைச் செய்துக் கொண்டதைப் பார்த்த கணவன் கதறியழுதது பார்ப்போரைக் கலங்க செய்தது.



இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் மேலத்தெருவில் வசித்து வருபவர் நடராஜன்(37).

கன்னியாகுமரியில் உணவகம் ஒன்றை நடத்தி வரும் நடராஜனுக்கு சமீபத்தில், கோயம்புத்தூர் பீளமேடு பகுதியில் வசித்து வரும் பாண்டு என்பவரது மகள் காயத்ரி(32)யுடன் பெற்றோர்களின் ஏற்பாட்டில் திருமணம் நடைபெற்றது.

திருமணம் முடிந்த ஒன்றரை மாதங்கள் கூட இன்னும் முழுதாக முடியாத நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், இளம்பெண் காயத்ரி, மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

உணவகத்தை இரவு மூடிவிட்டு, வீட்டுக்கு வந்த நடராஜன், காயத்ரி தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்து கதறித் துடித்தார். நடராஜனின் அழுகுரல் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து, காயத்ரி பிணமாக தொங்குவதைப் பார்த்து, உடடினயாக இது குறித்து காவல் நிலையத்திற்கு தகவலளில்த்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், காயத்ரியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, காயத்ரியின் மரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

காயத்ரியின் தற்கொலை குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்கொலை செய்து கொண்ட இடத்தில், வீடு முழுவதும் சோதனை செய்து பார்த்தும், தற்கொலை குறித்த கடிதம் ஏதும் சிக்கவில்லை.

தற்கொலைக்கு முன்பு காயத்ரி குடும்பத்தில் பிரச்சினை ஏதும் நடந்ததா? இல்லை வேறு ஏதேனும் தற்கொலைக்கு காரணமா? என பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

திருமணமான சிலவாரங்களிலேயே புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது கன்னியாகுமரியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.