வவுனியா நரசிங்கர் ஆலயத்தால் இலவசக் கற்றல் வகுப்புக்கள் ஆரம்பம்!!

1354

வவுனியா பூந்தோட்டம் லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலயத்தின் கல்வி சமூக அபிவிருத்தி நிதியத்தின் ஏற்ப்பாட்டில் இலவசக் கற்றல் வகுப்புக்கள் ஆரம்பிக்கும் நிகழ்வு நரசிங்கர் ஆலய கலாசார மண்டபத்தில் நேற்று (17.12) இடம்பெற்றது.

இதன்போது, வறிய குடும்பங்களை சேர்ந்த 125 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன், மேல்வகுப்பு மாணவர்களுக்கான இலவசக் கற்றல் வகுப்புக்களும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

ஆலயத்தின் தலைவர் கோ.சிறீஸ்கந்தராஜாவின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், முதன்மை அதிதியாக மேலதிக மாவட்டசெயலாளர் தி.திரேஸ்குமார் கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், பிரதேச செயலாளர் நா.கமலதாசன், வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜெயக்கொடி, முன்னாள் மாகாணசபை உறுப்பினர் செ.மயூரன், பொதுமக்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.