அவுஸ்திரேலியாவில் 29 வயது இலங்கையர் அரங்கேற்றிய கொடூரம் : பறிபோன உயிர்!!

1176

அவுஸ்திரேலியாவில்..

ஆஸியில் கன்பரா மிருகக்காட்சிசாலையில் உள்ள சமையலறைக் களஞ்சிய அறையில் இளம் பெண்ணான சக ஊழியரைக் கத்தியால் குத்திக் கொன்றதாக இலங்கையைச் சேர்ந்த சமையல்காரர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனை அவுஸ்திரேலிய ஊடகங்கள் இன்று (19) செய்தி வெளியிட்டுள்ளன. 29 வயதான ஜூட் விஜேசிங்க திங்கட்கிழமை இரவு கைது செய்யப்பட்டு பொலிஸ் பாதுகாப்பின் கீழ் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இவரது உடம்பில் சில காயங்கள் காணப்பட்டதாகவும் அவை அவராலேயே ஏற்படுத்திக் கொள்ளப்பட்டவை எனவும் தெரிய வந்துள்ளது. சம்பவத்தில் பலியானவர் 29 வயதான பூட்டான் நாட்டவர் என தெரிய வந்துள்ளது.விஜேசிங்க மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதை பொலிஸார் செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தினர்.