மருமகனின் தாக்குதலில் மாமி பரிதாபமாக பலி!!

625

Murder

ராகம பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தினால் தாக்கி பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். தாக்குதலின்போது படுகாயமடைந்த பெண் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

64 வயதான வயோதிபப் பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த பெண்ணின் மருமகன் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.

வீட்டில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் தாக்குதலின்போது அந்நபரின் மனைவியும் காயமடைந்துள்ளார். இந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை ராமக பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.