இலங்கை அகதிகளின் படகை திருப்பி அனுப்ப நடவடிக்கை : அவுஸ்திரேலிய ஊடகம்!!

663

Boat

அவுஸ்திரேலிய கடல்பரப்பில் நுழைந்த இலங்கை அகதிகளின் படகினை அவ்வாவாறே இந்தியா நோக்கி திருப்பி அனுப்ப அவுஸ்திரேலிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அவுஸ்திரேலியாவின் ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

153 அகதிகளுடன் அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவில் இருந்து 175 கடல் மைல்களுக்கு அப்பால் இந்த படகு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் குறித்த படகினை அங்கிருந்து திருப்பி அனுப்புவதற்கான நடவடிக்கைகளை அவுஸ்திரேலியா மேற்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

இவ்வாறு திருப்பி அனுப்புவது சர்வதேச சட்ட மீறல் என்றும் குறித்த ஊடகம் தெரிவித்துள்ளது.