வடமாகாண கல்விப்பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகாரஅமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் நிதிஅனுசரனையில் நூல் வெளியிடுவதில் இடர்பாடுகளை சந்தித்துள்ள எழுத்தாளர்களை ஊக்கிவிக்கும் திட்டத்தின்கீழ் வவுனியா பிரதேசத்தை சேர்ந்த 5 எழுத்தாளர்களுக்கு தலா 5000 ருபா வீதம் ஊக்கிவிப்பு கொடுப்பனவு வவுனியா பிரதேசசெயலகத்தில் 30.06 அன்று (நேற்று) வழங்கப்பட்டது.
வவுனியா உதவிப் பிரதேசசெயலாளர் திருமதி சாராதாஞ்சலி கர்ணண் தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் எழுத்தாளர்களான கலாநிதி அகளங்கன் (நா.தர்மராஜா), சு.வரதகுமார், மு.நந்தகுமாரன், ஞா.ஜெகநாதன் திருமதி.மேரிமெற்றலின் ஜயகெனடி ஆகியோருக்கே தலா 5000 ருபா வழங்கப்பட்டது
இந்நிகழ்வில் ;வவுனியா மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர், வவுனியா பிரதேசசெயலக கணக்காளர் அ.ஜெயபாஸ்கர், நிர்வாக கிராம உத்தியோகதர் மு.விஜயரட்ணம், அபிவிருத்தி உத்தியோகத்தர்.ஆர்.டிலக்ஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் கலாநிதி அகளங்கன் உரையாற்றுகையில் எனது வாழ்கையில் 40 வருட காலமாக புத்தகத்தை வெளியிட்டு நட்டப்பட்டதே அதிகம், புத்தககடைகளில் காட்சிக்காக 5 புத்தகத்தைதான் கொடுக்கிறோம் அங்கு புத்தகம் விற்பனைசெய்யப்படுவது அரிது.
சில கடைக்காரர் புத்தகத்தை காட்சிப்படுத்துவதும் இல்லை. இன்று இந்த 5000 ருபா காசோலை வழங்கப்படுவது போதாது கூடுதலான தொகை எழுத்தாளர்களுக்கு வழங்கப்படல்வேண்டும் என்றார்.
சு.வரதகுமார் உரையாற்றுகையில் நான் இதுவரை 5 புத்தகங்களை வெளியிட்டுள்ளேன் எனது முதலாவது புத்தகத்திற்கான ஊக்கிவிப்பதற்கு அகளங்கன் ஆசிரியர் உதவினார். தொடர்ந்து கலாசாரஉத்தியோகத்தரின் ஆலோசனைகள் உற்சாகப்படுத்தியது.
ஏதுவரை என்ற விமர்சனநூல், கலைந்ததேனீக்கள் என்ற கவிதை தொகுப்பு, நூல் மனமேபேசு என்ற நாடகநூல், மனவடுக்கள் என்ற கவிதை தொகுப்பு, நூல் சிந்தித்தால் துன்பமில்லை என்ற சிறுவர்கதை நூல் ஆகிய நூல்களில் கலைந்ததேனீக்கள் நூல் வீட்டில் விற்பனையாகாது இருக்கிறது.
இப்புத்தகம் வீட்டில் இருக்கும் போது அம்மா திட்டுவார் அச்சமயம் இனி புத்தகம் வெளியிடமாட்டேன் என்று சொல்லிவிட்டு மீண்டும் சென்ற ஆண்டு 3 புத்தகங்களை வெளியிட்டேன் தொடர்ந்து புத்தகங்களை வெளியிட நிதிபோதாது இருகின்றபோது இந்த 5000 ருபா பணம் உற்சாகத்தை தந்துள்ளது.
இனிவரும் காலங்களில் எழுத்தாளர்கள் நூல்களை கொள்வனவு செய்ய பாடசாலைகளும் பிரதேசங்களில் உள்ள அணைத்து நூலகங்களும் முன்வரவேண்டும் அதற்கு பிரதேச செயலாளர்கள் வலயக் கல்விப்பணிப்பாளர்களையும் உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்களிடம் உரையாடவேண்டும்.
ஒருகாலத்தில் நூல்களை வெளியிடமுடியாத நிலமை, தற்போது காலம் கணிந்து வரும்சூழல் எனவே இந்த காசோலை வழங்கும் செயற்பாட்டை வரவெற்கிறேன். நாளைய சந்ததிகளின் வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்க மேலும் பல நூல்கள் இம்மண்ணில் வெளிவர உதவ அரசாங்கம் உதவ வேண்டும் என்றார்.





