நாக்கை நறுக்கென்று கடித்தது எதற்காக : விளக்கமளித்த விஜயகாந்த்!!

872

Vijayakanth

சட்டசபையில் நாக்கை கடித்தது ஏன் என்பது குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் விளக்கமளித்துள்ளார்.

கலந்தாலோசனை நிகழ்ச்சிக்காக மாவட்டம் வாரியாக, சுற்றுப்பயணம் செய்து வரும் விஜயகாந்த் நேற்று முன்தினம் நாமக்கலில் நடந்த கலந்தாலோசனை கூட்டத்தில், லோக்சபா தேர்தலில் தோற்றது குறித்து, யாரும் கவலைப்பட வேண்டாம். கட்சிக்கு, புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். குறிப்பாக கட்சித் தொண்டர்கள் குடும்பத்தின் உறவினர்களையும், கட்சியில் உறுப்பினராக சேர்க்க வேண்டும்.

நான் சட்டசபைக்கு ஏன் போகவில்லை என பலரும் கேட்கின்றனர். அங்கே சென்று, எதிர்க்கட்சியாகவும் சட்டசபை உறுப்பினராகவும் பணியாற்ற முடியவில்லை. அதற்கான சூழ்நிலை அங்கில்லை.தமிழக சட்டசபையில் ஏற்கனவே நான் கலந்து கொண்ட போது, பால் விலை உயர்த்தப்பட்டது குறித்து பேசினேன்.

அடுத்து, அரசு திட்டம் சார்ந்த கேள்வியை எழுப்பினேன். சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சர் பதிலளிக்கவில்லை. சம்பந்தமே இல்லாமல் மின்சாரத் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் எழுந்து நின்று பதில் கூறினார். அதுவும் என்னை கேலி செய்து பேசினார்.

அதனால், எனக்கு கோபம் வந்ததால் என்னுடைய கோபத்தை வெளிப்படுத்தும் விதமாக அமைச்சரை பார்த்து நாக்கை கடித்தேன். அதில் என்ன தவறு இருக்கிறது.

ஆனால் அதை தவறு என பிரசாரம் செய்கின்றனர் என்றும் இது தவறு என்றால் சட்டசபையில் தொடர்ந்து கருத்து பரிமாற்றம் செய்யவும், மக்கள் பிரச்னைகளை எடுத்துக் கூறவும் முடியாது என்பதால்தான் நான் அங்கு செல்வதில்லை எனவும் கூறியுள்ளார்.

மேலும், அங்கு செல்லாமலேயே கூட மக்கள் பணியாற்ற முடியும். அதைத்தான், நான் செய்து வருகிறேன் என்று பேசியுள்ளார்.