வவுனியா கருமாரியம்மன் ஆலயத்தில் 19ம் ஆண்டு சுனாமி நினைவு தினம்!!

655


வவுனியா, குட்செட்வீதி, கருமாரியம்மன் ஆலயத்தில் 19 ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம் இன்று (26.12) காலை அனுஸ்டிக்கப்பட்டது.இதன்போது, சுனாமியில் உயிர் நீத்த உறவுகளிற்காக மோட்ச தீபமேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், விசேட பூசை வழிபாடுகளும் இடம்பெற்றது.

வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியமும், ஸ்ரீ கருமாரி அம்மன் தேவஸ்தான பரிபாலன சபையினரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், அந்தணர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.