மூடப்படுகிறது ஓர்குட் : கூகுள் நிறுவனம் அறிவிப்பு!!

324

Orkut

சமூக வலைத்தளமான ஓர்குட் சேவையை நிறுத்த போவதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த 2004 ஆம் ஆண்டு பேஸ்புக் தொடங்கிய போதுதான் ஆர்குட் வலைத்தளமும் தொடங்கப்பட்டது.

ஆரம்பத்தில், பிரேசில் போன்ற நாடுகளில் பிரபலமான ஓர்குட் பின்னர் உலகம் முழுவதும் பரவி பிரபலமானது. இந்தியாவிலும் ஒரு நேரத்தில் உச்சத்தில் இருந்தது. ஆனால் தற்போது பேஸ்புக் மட்டுமே பந்தயத்தில் முதலிடத்தில் உள்ளது.

தொடங்கி பத்தாண்டுகள் ஆகிவிட்ட போதிலும் பேஸ்புக், யூடியூப், பிளாக்கர் மற்றும் கூகுள் பிளஸ் போன்ற தளங்களின் போட்டியை சமாளிக்க முடியாமல் ஓரங்கட்டுப்பட்டு விட்டதால் ஓர்குட் சேவையை வரும் செப்டம்பர் 30 முதல் நிறுத்த போவதாக கூகுள் அறிவித்துள்ளது.

எனினும், ஏற்கனவே ஓர்குடில் இருக்கும் பயனாளர்கள் 2016ம் ஆண்டு வரை தகவல்களை சேமித்துக் கொள்ள முடியும் என்று கூகுள் தெரிவித்துள்ளது.

ஓர்குட், பேஸ்புக் இரண்டும் ஒரே ஆண்டில்தான் தொடங்கப்பட்டது என்றாலும், பேஸ்புக் தற்போது 1.28 பில்லியன் பயனாளர்களுடன் உலகின் முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.