வவுனியா ஊடான வடக்கிற்கான யாழ்ப்பாணம் – கொழும்பு புகையிரத சேவை இடைநிறுத்தம்!!

1089

தொடருந்து..

வடக்கிற்கான தொடருந்து சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தகவலை தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. சேவை இடைநிறுத்தம் தொடர்பில் திணைக்களம் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு தொடருந்து மார்க்கத்தை நவீனமயமாக்கும் திட்டத்தின் இரண்டாம் கட்டம் ஜனவரி 7 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனவே மஹவ தொடக்கம் அனுராதபுரம் வரையான வடக்கு தொடருந்து மார்க்கம் அன்றைய தினம் முதல் 06 மாத காலத்திற்கு மூடப்படும் என அதன் பிரதி முகாமையாளர் என்.ஜே. இந்திபொலகே குறிப்பிட்டுள்ளார்.

இந்த காலப்பகுதியில் கொழும்பில் இருந்து மஹவ மற்றும் அனுராதபுரத்திலிருந்து காங்கசன்துறை வரை மட்டுமே தொடருந்து சேவைகள் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.