
சுருதிஹாசன் தமிழில் விஷால் ஜோடியாக பூஜை படத்தில் நடிக்கிறார். நான்கு இந்திப் படங்களிலும் நடித்துக் கொண்டு இருக்கிறார். ரசிகர்களுக்கு பிடித்த நடிகைகள் பற்றிய கருத்து கணிப்பு ஒன்றில் முதல் இடத்தை பிடித்தார். சுருதிஹாசன் கூறியதாவது..
என் பிளஸ் எனது தோற்றம்தான். காலத்துக்கு ஏற்ற மாதிரி என்னை மாற்றிக் கொள்வேன். அழகான தோற்றம்தான் எல்லோரையும் விரும்ப வைக்கும். நான் லட்சியத்தை அடைய கடுமையாக உழைக்கிறேன். முக அழகு மட்டும் இருந்தால் போதாது புத்திசாலித்தனமும் வேண்டும். அறிவு இல்லாத அழகு பயனற்றது.
எந்த நடிகையும் காலையில் எழும்போது திரையில் வருவது போல் இருப்பது இல்லை. சினிமாவில் அழகாய் காட்ட சிகை அலங்கார நிபுணர் மேக்கப்மேன் என ஒரு குழுவே வேலை செய்கிறது. நாம் கவர்ச்சியாக இருக்கிறோம் என்று நம்ப வேண்டும். என்னை அழகாக வைத்துக் கொள்ள உணவு கட்டுப்பாடுகளை கடை பிடிக்கிறேன். தினமும் உடற்பயிற்சிகள் செய்கிறேன். சருமத்தை பாதுகாக்கிறேன்.
என் அழகுக்கு எனது பெற்றோரும் பரம்பரை ஜீன்னும் காரணம். எனக்கு புத்திசாலித்தனமான நல்ல இதயம் உள்ள ஆணை பிடிக்கும். அவருக்கு உணர்வுப் பூர்வமான கண்களும் தாடியும் இருக்க வேண்டும். எனக்கு பிடித்த ஆண் மெர்லின் பிராண்டோ என்று தெரிவித்தார்.





