மனைவியைக் கொன்ற கணவர் தானும் தற்கொலை!!

537

Murder

எம்பிலிபிடிய – மொரகெடிய பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கி தனது மனைவியைக் கொலை செய்தவர் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

பொலிஸ் அவசர அழைப்பு இலக்கத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் சடலங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

எம்பிலிபிடிய – மொரகெடிய பகுதியைச் சேர்ந்த 47 வயதான மனைவி மற்றும் அவரது 50 வயதான கணவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

குடும்பப் பிரச்சினை காரணமாகவே இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சடலம் எம்பிலிபிடிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, பிரேதப் பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளன.