யாழ்.பல்கலைக்கழக மாணவன் மீது தாக்குதல்!!

542

Attrack

யாழ்.பல்கலைக்கழக மாணவன் ஒருவர் மீது சக மாணவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

மருதனார்மடம் நுண்கலைப்பீட மாணவன் முகமட் அசாம் (23) மீது நேற்று சகமாணவர்கள் மூவர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த மாணவன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடே இந்தத் தாக்குதலுக்குக் காரணமென பொலிஸார் குறிப்பிட்டனர். இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகப் சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.