
கடல் மார்க்கமாக சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்குள் நுழைய முற்பட்ட நால்வர் தமிழகத்தின் தனுஷ்கோடி பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளதாக கியூ பிரிவு பொலிஸார் இந்திய ஊடகங்களிடம் குறிப்பிட்டுள்ளனர்.
சாந்தி, மிலர், சபேஸ் மற்றும் சுப்பையா எனப்படும் நால்வரே இவ்வாறு கைதாகியுள்ளதாகவும் அவர்கள் தற்போது மண்டபம் பிரதேசத்திலுள்ள அகதிகள் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சட்டவிரோத ஆட்கடத்தல்காரர் ஒருவரிடம் 20,000 ரூபா கொடுத்து கடல் மார்க்கமாக தமிழ்நாட்டை வந்ததடைந்ததாக சந்தேகநபர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
எதுஎவ்வாறு இருப்பினும் குடிவரவு, குடியாகழ்வு சட்டத்தை மீறியமை தொடர்பில் இவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக கியூபிரிவு பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.





