
மெக்சிகோவில் பெனிட்டோ ஜுவரஸ் எனும் பகுதியில் 25 அடி நீளமான மலைப்பாம்பினால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மெக்சிகோ நாட்டில் உள்ள பெனிட்டோ ஜுவரஸ் என்ற இடம் அருகே மெக்சிகோ ரெயில் ஒன்று சென்று கொண்டு இருந்தது. தூரத்தில் ஒரு நீளமான பாம்பு படுத்து இருப்பதை பார்த்து ரயில் நிறுத்தபட்டது.
அருகே சென்று பார்த்த போது அன்கோண்டா வகையை சேர்ந்த 25 நீள பாம்பு ஒன்று தலை இல்லாமல் இருந்தது பயணிகள் பீதி அடைந்தனர். உடனடியாக வனவிலங்கு அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டு அவர்களுடைய உதவியால் அந்த பாம்பு அகற்றப்பட்டது.
தன்னுடைய வாழ்க்கையில் இவ்வளவு பெரிய பாம்பை தாங்கள் இதுவரை பார்த்ததில்லை என்று ரயில் பயணிகள் கூறினர். இது தொடர்பில் வன விலங்கு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இது தொடர்பில் தெரியவந்ததாவது,
பெனிட்டோ ஜுவரஸ் கிராம மக்கள் வயிற்றுப்பகுதி பெரியதாக உள்ள நிலையில் மலைப்பாம்பை பார்த்து உள்ளனர். குழந்தைகள் எதையாவது உயிரோடு விழுங்கியிருக்கக்கூடும் என சந்தேகம் அடைந்தனர்.
இதை தொடர்ந்து கிராம மக்கள் பெரிய கட்டைகளால் பாம்பை அடித்து கொன்று தலையை வெட்டி எடுத்து உள்ளனர்.பின்னர் வயிற்று பகுதியை கிழித்து பார்த்து உள்ளனர். மனிதர்கள் யாரையும் விழுங்கவில்லை இல்லை கன்றுக்குட்டி என்பதை அறிந்தவுடன் அந்த பாம்பை தூக்கி ரயில்வே தண்டவாளம் அருகில் போட்டுவிட்டு சென்றுவிட்டனர்.
இது போன்ற பாம்பு, மனிதர்கள் வாழும் கிராமத்து அருகில் வந்தால் அது அங்கு வசிப்பவர்களுக்கும், கால்நடைகளுக்கும் ஆபத்து என்பதை அறிந்தே அந்த பாம்பை கொன்றதாக கிராமத்தினர் கூறியுள்ளனர்.





