பிரித்தானியாவில் 12 வயது சிறுமி ஒருவர் 80 வயது நபர் போல் தோற்றமளிக்கும் அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
அஷானி எலியாட் சுமித் (12) என்ற இந்த சிறுமிக்கு கடந்த 2010ம் ஆண்டு சசக்ஸ் பிரித்தானியா மோட்டர் உரிமையாளர் கிளப், அமெரிக்காவிற்கு சுற்றுலா செல்லவும், டொல்பின் உடன் நீச்சல் செய்யும் அரிய அனுபவம் பெறவும் 3,500 பவுண்டுகள் நிதியுதவி அளித்துள்ளது.
ஆனால் அவரது தந்தை அல்பி, குடும்பத்தினருக்கு தெரியாமல் அனைத்து பணத்தையும் 2 மாதங்களில் சுற்றுலா சென்று அனுபவித்துள்ளார்.
பின்னர், இதனை கண்டுபிடித்த அவரது மனைவி பொலிசில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து தற்போது அல்பியின் செயல் இறக்கமற்றது என கூறி நீதிபதி இவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளார்.






