
சென்னை கட்டிட விபத்தின் இடிபாடுகளில் சிக்கி இருப்பவர்களை மீட்கும் பணியில் 5 மோப்ப நாய்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜான்சி, ஓரி, ஜூலி, ஜாக்கி, ஜெசிகா என்ற இந்த ஐந்து நாய்கள் கட்டிட இடிபாடுகளுக்குள் சென்று மோப்பம் பிடித்து யாராவது உயிருடன் இருக்கிறார்களா என்பதை அறிய உதவுகின்றன.
மேலும் ஐந்தாவது நாளாக தொடர்ந்து நடைபெறும் தேடுதல் மற்றும் மீட்பு பணியில் இந்த மோப்ப நாய்களின் உதவியோடு 11 பேரை உயிருடனும், 4 பேரை இறந்த நிலையிலும் மீட்பு பணியினர் மீட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.





