
மலையாள நடிகரை பிரியாமணி காதலிப்பதாக கிசுகிசுக்கள் பரவி உள்ளன. பிரியாமணி தற்போது இரு கன்னட படங்களிலும் ஒரு மலையாள படத்திலும் நடிக்கிறார். இவருக்கு 30 வயது ஆகிறது. விரைவில் பிரியாமணிக்கு திருமணத்தை முடிக்க பெற்றோர் விரும்பினர்.
இதற்கிடையில் ஒருவரை காதலிப்பதாகவும் நேரம் வரும்போது அவர் யார் என்பதை வெளியிடுவேன் என்றும் பிரியாமணி கூறினார். அவரது மர்ம காதலன் யார் என்பதை அறிந்து கொள்ள திரையுலகினரும் ரசிகர்களும் ஆர்வம் காட்டினர்.
இச்சூழலில் மலையாள நடிகர் கோவிந்த் பத்மசூர்யா தனது டுவிட்டரில் பிரியாமணியுடன் சேர்ந்து இருப்பது போன்ற படமொன்றை வெளியிட்டார். இதையடுத்து பிரியாமணி காதலிப்பவர் கோவிந்த் பத்ம சூர்யாதான் என பரபரப்பு ஏற்பட்டது.
கோவிந்த் மலையாளத்தில் அதாய நாணல், டாடி கூல் போன்ற படங்களில் நடித்துள்ளார். கோவிந்து தான் காதலன் என வெளியான செய்திகளுக்கு பிரியாமணி பதில் அளிக்கவில்லை. அவரது தாயார் இதனை மறுத்துள்ளார். கோவிந்த் யார் என்றே எனக்கு தெரியாது. பிரியாமணி அவரை காதலிக்கவில்லை என்றார்.





