மத விரிவுரையாளரினால் ஆபத்தான நிலையில் மற்றுமொருவர்!!

791

திம்புலாகலையில்..

மத விரிவுரைகளை வழங்கிய ருவான் பிரசன்ன குணரத்னவின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டதாக சந்தேகிக்கப்படும் மற்றுமொருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திம்புலாகலை சிறிபுர பிரதேசத்தை சேர்ந்த 26 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை விஷம் அருந்தியதால் தெஹியத்தகண்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறிபுர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த நபர் மற்றும் அவரது மனைவி விரிவுரைகளை வழங்கிய ருவன் பிரசன்ன குணரத்னவின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டிருந்ததாகவும் நுவரகலைச் சேர்ந்த சுமார் ஐந்து பேரும் கலந்து கொண்ட நிலையில் பொலிஸ் விசாரணைகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

தெஹியத்தகண்டிய வைத்தியசாலையில் விஷம் குடித்து ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் நபர் விரிவுரைகளில் பங்கேற்றாரா இல்லையா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை.

எனினும் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட பெண் பலருக்கு விரிவுரைகளை வழங்கியதுடன் மத தத்துவத்தை பரப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தார் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

விரிவுரைகளை வழங்கியதாகக் கூறப்படும் ருவன் பிரசன்ன குணரத்ன, தெஹியத்தகண்டிய பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு சொந்தமான வீட்டில் சுமார் ஆறு வருடங்களாக வாடகைக்கு தங்கியிருந்தமை விசாரணைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

டிசம்பர் 28ஆம் திகதி ருவன் பிரசன்ன ஒரு வகை விஷத்தை பயன்படுத்தி உயிரை மாய்த்துக் கொண்டார், இரண்டு நாட்களுக்கு பின்னர் அவரது மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளும் அதே முறையில் உயிரை மாய்த்துக் கொண்டனர்.சமய தத்துவ விரிவுரைகளை வழங்கிய ருவன் பிரசன்ன குணரத்னவின் விரிவுரைகளில் கலந்து கொண்ட பலர் பொலன்னறுவையின் பல பிரதேசங்களில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருவதாக பாதுகாப்பு புலனாய்வு அமைப்புக்கள் தெரிவிக்கின்றன.