வவுனியாவில் ஏ9 வீதியை கடக்க முயன்ற முதலை வாகனம் மோதியதில் பரிதாபமாக உயிரிழப்பு!!

672

Crocodile

வவுனியா ஓமந்தை பிரதேசத்தில் ஏ9 வீதியை கடந்துகொண்டிருந்த முதலையொன்று வாகனத்தில் மோதி இறந்துள்ளது. வவுனியா மாவட்டத்தில் கடும் வறட்சி நிலவி வரும் நிலையில் குளங்களில் நீர் வற்றியுள்ளமையினால் முதலைகள் தற்போது நீர் தேடி நிலப்பரப்பிற்குள் வருகின்ற நிலை காணப்படுகின்றது.

இந்நிலையிலேயே ஓமந்தை பகுதியில் நேற்று அதிகாலை ஏ9 வீதியை சுமார் 5 அடி நீளமுள்ள முதலையொன்று கடந்துகொண்டிருந்த சமயம் எதிர்பாராத விதமாக வாகனமொறு அதன் தலை மீது ஏறியமையினால் அவ்விடத்திலேயே இறந்துள்ளது.