
கணவருக்கு உரிய சிகிச்சைகளை வழங்குமாறு இலங்கை பெண் இந்திய அதிகாரிகளிடம் கோரியுள்ளார். தனது கணவர் இரத்த வாந்தி எடுப்பதாகவும் கடுமையாக நோய் வாய்ப்பட்டுள்ளதாகவும் நந்தினி என்ற இலங்கை பெண் அகதி தெரிவித்துள்ளார்.
49 வயதான பாட்டு குஞ்சாரா என்ற தனது கணவருக்கு உரிய சிகிச்சை வழங்கப்பட வேண்டுமென கோரியுள்ளார். குறித்த நபர் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது மஹாத்மா காந்தி நினைவு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். களவாடப்பட்ட தங்க ஆபரணங்களை விற்பனை செய்த குற்றத்திற்காக 2012ம் ஆண்டு தமிழக பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட குஞ்சாரா தொடர்ச்சியாக சென்னை, திருச்சி மற்றும் செங்கல்பட்டு சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டு வருகின்றார்.
கணவர் சில தினங்களாக இரத்த வாந்தி எடுத்து வருவதாகவும், வசதிகள் கூடிய வைத்தியசாலையில் அனுமதித்து சிகிச்சை அளிக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியதாகவும் நந்தினி தெரிவித்துள்ளார்.
எனினும் குறித்த பெண் கூறுவதனைப் போன்று பாரிய நோய்கள் இலங்கை அகதிக்கு கிடையாது என இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதிகளவு மது அருந்தியதனால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும், நந்தினி கூறுவதனைப் போன்று ஆபத்தான நிலையில் குறித்த நபர் இல்லை எனவும் தெரிவித்துள்ளனர்.





