எண்ணை பூசுவதாகக் கூறி பெண்ணை துஷ்பிரயோகம் செய்த மதகுரு கைது!!

714

A6

ஆணமடு – குருபொகுணகம பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதான பெண்ணொருவரை துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும், மதகுரு ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைதான சந்தேகநபர் ஆணமடு – கோன்வலகந்த பிரசேத்தைச் சேர்ந்த 51 வயதான மதகுரு ஒருவராவார். ஆணமடு பகுதியைச் சேர்ந்த தேவாலயம் ஒன்றின் மதகுருவான இவர், அந்தப் பகுதியில் இருந்து தனது சமய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.

சந்தேகநபர் கடந்த 2ம் திகதி பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டுக் சென்று தலையில் எண்ணெய் பூசுவதாகக் கூறி, அவரை துஷ்பிரயோகம் செய்ததாக தெரியவந்துள்ளது.

இது பற்றி அந்தப் பெண் தனது கணவருக்கு கூறியதை அடுத்து, பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கைதான குறித்த மதகுரு ஆணமடு மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.