மன்னாரில் வெங்காய வெடி வெடித்ததில் ஒருவர் பலி!!

606

Blast

மன்னார் மாவட்டத்தின் தச்சனா மருதமடு பகுதியில் நேற்று மாலை வெங்காய வெடி வெடித்ததால் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபர் ஒரு பிள்ளையின் தந்தையான 31 வயதுடைய தோமஸ் ஸ்ரீபன் என்பவராவார்.

இவர் விலங்கு வேட்டைக்காக வீட்டில் வெங்காய வெடி தயாரித்துக் கொண்டிருக்கும் போது தவறுதலாக வெடியொன்று வெடித்ததனால் இவர் படுகாயங்களுக்குள்ளாகியுள்ளார். படுகாயமடைந்த இவரை முருங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.