
டென்னிஸ் போட்டியை காண விம்பிள்டன் சென்ற சச்சினை யாரென்று ஷரபோவா கேட்டதை தொடர்ந்து சச்சின் ரசிகர்கள் அவரை திட்டி தீர்க்கின்றனர்.
கடந்த சனிக்கிழமை விம்பிள்டனில் நடைபெற்ற டென்னிஸ் போட்டியை காண இந்திய அணியின் நட்சத்திரமாக விளங்கிய சச்சின், அவருடன் இங்கிலாந்தின் பிரபல முன்னாள் கால்பந்து வீரர் டேவிட் பெக்கம் மற்றும் கோல்ப் வீரர் இயன் பௌல்டர் ஆகியோர் சென்றிருந்தனர்.
இந்நிலையில் பெக்கம் மற்றும் அனைவரையும் தெரியும் என கூறிய ஷரபோவா ரசிகர்கள் மனதில் நீங்க இடம் பெற்ற சச்சினை யார் என்று தெரியாது எனக் கூறியுள்ளார்.
இதைத் கேட்ட ரசிகர்கள் இது ரொம்ப அதிகம், கடவுளை தெரியாமல் எப்படி இருக்கலாம், ஒரு வேளை கடவுள் நம்பிக்கை அற்றவர் போல, ஷரபோவாவை பொது அறிவு புத்தகத்தை வாங்கி படிக்க சொல்லுங்கள் என தங்கள் கருத்துகளை இணையத்தில் பதிவு செய்த வண்ணம் உள்ளனர்.
அதுமட்டுமல்லாது இவர் தான் சச்சின் என்று அவரின் அருமை, பெருமைகளை புரிய வைக்கும் படங்களையும் பதிவு செய்து வருகின்றனர்.





