ரஷ்யாவின் அதிரடி முடிவால் ஆட்டம் காணவுள்ள இணையத்தளங்கள்!!

312

W

பிரஜைகள் உட்பட தமது நாடு தொடர்பான தகவல்களை சொந்த நாட்டிற்கு வெளியே உள்ள சேவர்களில் வைத்திருக்கும் இணையத்தளங்களை முடக்குவதற்கு ரஷ்யா அரசு தீர்மானித்துள்ளது.

பாதுகாப்பு காரணங்கள் குறித்து இதே முடிவை முன்னர் சீனா எடுத்திருந்தது, அதே பாணியில் தற்போது ரஷ்யாவும் இறங்கியுள்ளது.

இதன்படி பேஸ்புக், கூகுள், டுவிட்டர், பிண்டேறேஸ்ட் போன்ற தளங்கள் உட்பட மேலும் பல தளங்களில் காணப்படும் ரஷ்யா தொடர்பான தகவல்கள் தமது நாட்டிலுள்ள சேவர்களிலேயே சேமிக்கப்பட வேண்டும் என எதிர்பார்க்கின்றது.

இதனை மீறி வெளி நாடுகளிலுள்ள சேவர்களில் தமது நாடு, பிரஜைகள் தொடர்பான தகவல்களை வைத்திருக்கும் இணையத்தளங்களை முடக்குவதற்கு எதிர்பார்த்துள்ளது.

இதனால் பல்வேறு இணையத்தளங்கள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.