ஜூலை 11ம் திகதி வெளியாகும் பப்பாளி!!

499

papali

எஸ்.அம்பேத்குமார் – ஏ.ரஞ்ஜீவ்மேனன் இருவரும் இணைந்து அரசூர் மூவீஸ் பட நிறுவனம் சார்பாக தயாரித்திருக்கும் படம் பப்பாளி. இதில் செந்தில் கதாநாயகனாகவும் இஷாரா கதாநாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். முக்கிய வேடத்தில் சரண்யா நடிக்கிறார். மற்றும் இளவரசு, ஆடுகளம் நரேன், சிங்கம் புலி, ஜெகன், கிருஷ்ணமூர்த்தி, கௌரவ வேடத்தில் நிரோஷா ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்தை கருப்பசாமி குத்தகைதாரர், வெடிகுண்டு முருகேசன் படங்களை டைரக்டு செய்த ஏ.கோவிந்தமூர்த்தி இயக்குகிறார். விஜய் எபிநேசர் இசையமைத்திருக்கிறார். ஒளிப்பதிவை விஜய் கவனிக்கிறார். படம் பற்றி இயக்குனர் ஏ.கோவிந்தமூர்த்தி கூறும்போது,

மாமியார் என்றாலே கொடுமைக்காரியாக சித்தரிக்கப்பட்ட சினிமாவில், நல்லவர்களாக சித்தரித்திருக்கிறோம். எங்களது படத்தில் நடித்த சரண்யா இனிமேல் நல்ல அம்மா மட்டுமல்ல, நல்ல மாமியார் என்று பாராட்டப்படுவார்.

படிப்பு எவ்வளவு முக்கியம் என்பதும், எடுத்து கொள்கிற லட்சியத்தை அடைய எந்த தடைக்கற்களையும் தாண்டிப் போக வேண்டும் என்கிற கருத்தையும் இதில் பதிவு செய்திருக்கிறோம். நல்ல கருத்தை முழுக்க முழுக்க நகைச்சுவை கலந்து உருவாக்கி இருக்கிறோம். நிச்சயம் அனைவரும் ரசிக்கும் படியான படமாக ‘பப்பாளி’ இருக்கும் என்றார்.