காயத்திலிருந்து மீண்டு படப்பிடிப்பில் கலந்துக் கொண்ட தனுஷ்!!

553

Danush

தனுஷ் நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படம் அனேகன். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், ஒரு சண்டைக் காட்சியின் போது தனுஷுக்கு அடிபட்டு காயம் ஏற்பட்டது. இதையடுத்து, கடந்த சில நாட்களாக அனேகன் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

சிறிது நாள் ஓய்வுக்குப் பிறகு, காயம் குணமடைந்த நிலையில் இன்று தனுஷ் மீண்டும் அனேகன் படப்பிடிப்பில் கலந்துகொண்டார். இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ள நிலையில் இன்னும் கிளைமாக்ஸ் காட்சிக்கான சண்டைக் காட்சியும், ஒரு பாடலும் படமாக்கப்பட உள்ளது.

இதில் தனுஷுக்கு ஜோடியாக அமிரா நடிக்கிறார். இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் கார்த்திக் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷ் இதுமட்டுமல்லாமல் பாலிவுட்டில் பிரபல இயக்குனர் பால்கி இயக்கும் படமொன்றில், அமிதாப்பச்சனுடன் இணைந்து நடித்து வருகிறார். இவரது 25வது படமான வேலையில்லா பட்டதாரி வருகிற ஜூலை 18ம் திகதி வெளியாகவிருக்கிறது.