முதலை இழுத்துச்சென்ற சிறுவனின் உடல் மீட்பு!!

1056

களனியில்..

களனி கங்கையில் நீராடியபோது முதலையினால் கௌவிச் சென்ற 11 வயதான சிறுவனின் சடலம் நேற்று (17) இரவு கண்டுபிடிக்கப்பட்டதாக கடுவலை பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் நடந்த இடத்திலிருந்து அம்பத்தளை நோக்கி சுமார் 100 மீற்றர் தொலைவில் சிறுவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.



அதேசமயம் சிறுவனின் உடலின் எந்த பாகமும் காணாமல் போனதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்றும் கடுவலை பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மீட்கப்பட்ட சடலம் பிரேத பரிசோதனைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் இவர் மேலும் தெரிவித்தார்.

கடுவலை வெலவிட்ட புனித அந்தோனி மாவத்தையில் வசித்து வந்த 11 வயதுடைய டிஸ்னா பிரமோத் பெரேரா என்ற பாடசாலை மாணவனே முதலை இழுச்சென்றதால் உயிரிழந்துள்ளார்.