நடிகர் ரஜினிகாந்திற்கு ஆந்திராவில் கடும் எதிர்ப்பு!!

634

Linga

நடிகர் ரஜினிகாந்த் தற்போது நடிக்கும் திரைப்பட படப்பிடிப்பை நிறுத்த வேண்டுமென ஹைதராபாத் அருகே உள்ள கிராமத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ரஜினிகாந்த் நடித்துவரும் லிங்கா என்னும் திரைப்படம் கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில், ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில் உருவாகி வருகிறது.

முதலில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு கர்நாடக மாநிலத்தில் தொடங்கியது.ஆனால், அங்கு கன்னட ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து

இரண்டாவது கட்ட படப்பிடிப்பு கடந்த 10 நாள்களாக ஹைதராபாத் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் நடைபெற்று வருகிறது. அனாஜ்பூரில் வியாழக்கிழமை படப்பிடிப்பு நடந்தபோது அப்பகுதி கிராம மக்கள் திடீரென படப்பிடிப்பை நடத்தக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்றப்பட்டதோடு படப்பிடிப்பும் சிறிது நேரம் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், படப்பிடிப்பில் பயன்படுத்தும் ரசாயனங்கள் அருகே உள்ள நீர் நிலையில் கலப்பதால் அதன் நிறம் மாறி வருவதாக கிராம மக்கள் குற்றம்சாட்டிள்ளனர்.