2025ஆம் ஆண்டு இலங்கையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய வரி!!

854

இலங்கையில்..

2025ஆம் ஆண்டு இலங்கையில் புதிய சொத்து வரி அறிமுகப்படுத்தப்படும் என சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான சிரேஷ்ட தூதுக் குழுவின் தலைவர் பீட்டர் ப்ரூவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கம் காணப்பட்ட வேலைத்திட்டத்தின் பிரகாரம் இந்த வரி அறிமுகப்படுத்தப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த வரி மூலம் சொத்து உரிமையாளர்களிடம் இருந்து அரசாங்கத்தால் வரி வசூலிக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 2022இல் வரி வருவாய் 7%ஆகக் குறைந்திருந்தது. இலங்கையின் வரலாற்றில் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை சமாளிக்க சர்வதேச நாணய நிதியம் பூரண ஆதரவை வழங்கி வருகிறது.

அரசாங்கத்தின் வரி வருமானத்தை முன்னைய நிலைக்கு அதிகரிப்பது மிகவும் முக்கியமானது. மேலும், கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கைகள் தொடர்பில் மிக விரைவில் இறுதி உடன்படிக்கைகளை எட்டுவது மிகவும் முக்கியமானது என சுட்டிக்காட்டியுள்ளார்.