மாணவியின் வயிற்றில் பேனா : அதிர்ச்சியில் மருத்துவர்கள்!!

559

தைவான் நாட்டில் மாணவி ஒருவரின் வயிற்றில் பேனா இருந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தைவானில் வசிக்கும் ஷிங் பாங் (20) என்ற மாணவி பல நாட்களாக வயிற்று வலியால் அவதிக்குள்ளாகியிருந்தார்.

இதனால் பொது மருத்துவரை அவர் அணுகி தன்னால் சரியாக சாப்பிட முடியவில்லை படிப்பிலும் கவனம் செலுத்த முடியவில்லை என கூறியுள்ளார்.

இதனையடுத்து மருத்துவர் அவரை எக்ஸ்ரே எடுத்து பார்த்ததில்,4 அங்குலம் நீளமுள்ள பொருள் ஒன்று அவர் வயிற்றில் இருந்ததுள்ளது.

உடனே அவர் வாய்வழியாக கமெராவை வயிற்றினுள் செலுத்தி எண்டோஸ்கோபி மூலம் சோதனை செய்ததில் அது பேனா என தெரியவந்ததால் மருத்துவர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

இதன்பின் அறுவை சிகிச்சை மூலம் பேனாவை மருத்துவர் வயிற்றிலிருந்து அகற்றியபோது அது அமிலத்தில் அரித்து போய் கிடந்துள்ளது.

இதுகுறித்து ஷிங் பாங் கூறுகையில், பேனா வயிற்றிற்குள் எப்படி வந்தது என்பது தெரியவில்லை என்றும் தேர்வில் வெற்றி பெற்றதை மது அருந்தி கொண்டாடியபோது பேனா வயிற்றுக்குள் நுழைந்திருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

P1 P2