வவுனியாவில் இடம்பெற்ற பாரிய விபத்தில் ஒருவர் பலி, இருவர் படுகாயம்!!

649

வவுனியா – நொச்சிமோட்டை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

இன்று முற்பகல் 11.15 அளவில் அக்கரைப்பற்றில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற வேன் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

நொச்சிமோட்டை பகுதியில் உள்ள அபாயகரமான வளைவொன்றில் வாகனமொன்றை முந்திச்செல்ல முற்பட்டவேளை குறித்த வேன் மரமொன்றுடன் மோதியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதன்போது ஒருவர் ஸ்தலத்திலேயே பலியானதுடன் இருவர் காயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

1 2 3