வவுனியா கோவில்குளம் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருஷாபிசேக(மணவாளக்கோல விழா )தின விஞ்ஞாபனம்-2014!!

428

Sivan

இலங்கைத் தீவின் வடபால் ஆறாவது ஈஸ்வர தலமாக விளங்கும் வவுனேஸ்வரம் என்று போற்றப்படும் கோவில்குளம் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் பத்தொன்பதாவது ஆண்டு நிறைவையொட்டி நிகழும் ஜெய வருடம் 21ஆம் நாள் 05-07-2014 சனிக்கிழமை அத்த நட்சத்திரத்தில் எம்பெருமானுக்கு நாவோத்திர சகஸ்திர சங்காபிசேகமும்(1008),

அம்பாளுக்கு அஷ்டோத்திர சங்காபிசேகமும்(108) ஏனைய பரிகார மூர்த்திகளுக்கு ஏககலச அபிசேகமும் நடைபெற திருவருளும் குருவருளும் கூடியுள்ளதால் அடியார்கள் அனைவரும் வந்து தரிசித்துஇஸ்டசித்திகளைப் பெற்றுய்யும்வண்ணம் கேட்டுகொள்கிறோம். அன்னதானமும் வழங்கப்படும்.

-பண்டிதர்-