
சொந்த மகளை பாலியல் ரீதியாக வல்லுறவுக்கு உட்படுத்தி எயிட்ஸ் நோயாளியாக்கிய கொடிய தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீர்கொழும்பு பிரதேசத்தில் இடம்பெற்றுள்ள இந்த சம்பவத்தில், எயிட்ஸ் நோயாளியான தந்தை, 16 வயதான மகளை சில தடவைகள் பலவந்தமான முறையில் பாலியல் ரீதியாக வன்புணர்ந்துள்ளார்.
40 வயதான சந்தேக நபர் மூன்று பிள்ளைகளின் தந்தையாவார். இந்த நபரின் மனைவிக்கும் எயிட்ஸ் நோய் தொற்றியுள்ளது. கணவன் மனைவி இருவரும் இரகசியமாக எயிட்ஸ் நோய்க்காக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவ்வாறான ஓர் நிலையில் கடந்த ஆண்டு, குறித்த தந்தை தனது 16 வயதான மகளை வன்புணர்ந்துள்ளார்.
உடலில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக வைத்தியசாலைக்குச் சென்ற போது நடத்தப்பட்ட பரிசோதனைகளின் மூலம் சிறுமிக்கும் எயிட்ஸ் நோய்த் தொற்று பரவியமை கண்டறியப்பட்டுள்ளது.
இதனை அடுத்து வைத்தியசாலையின் வைத்தியர்கள் சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்துள்ளனர்.
முறைப்பாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரான சிறுமியின் தந்தை நீர்கொழும்பு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.





