வவுனியாவில் இலங்கையின் 76 ஆவது சுதந்திரதினம் அனுஸ்டிப்பு!!

1080


இலங்கையின் 76 ஆவது சுதந்திரதினம் இன்று (04.02) வவுனியா மாநகரசபை மைதானத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.வவுனியா அரசாங்க அதிபர் பீ.ஏ.சரத்சந்திரவின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினரும், வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான கு.திலீபன் பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்தார்.

பாடசாலை மாணவர்களின் பாண்ட் இன்னிசை, மாணவர் படையணி உட்பட முப்படை அணிவகுப்பும் இதன்போது இடம்பெற்றதுடன் பொலிஸ் உயர் அதிகாரிகள் உட்பட முப்படை அதிகாரிகள், மதத்தலைவர்கள், அரச அதிகாரிகள் உட்பட பலரும் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.