வவுனியா நகர் முழுவதும் பறக்கவிடப்பட்ட தேசியக் கொடிகள்!!

452


வடக்கு கிழக்கு மாகாணங்களில் சுதந்திரதினத்தினை கரிநாளாக அனுஸ்ரித்து வருகின்ற இந்நிலையில் வவுனியா நகர் முழுவதும் தேசிய கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன.வவுனியா ஏ9 வீதியின் இரு பகுதிகளிலும், மணிக்கூட்டு கோபுரம், வைத்தியசாலை சுற்றுவட்டம் ஆகிய பகுதிகளில் இலங்கையின் தேசிய கொடி பறக்கவிடப்பட்டுள்ளன.

சுதந்திரதினத்தினை கரிநாளாக அனுஸ்ரித்து தமிழ் தேசிய அரசியல் கட்சிகளின் ஏற்பாட்டில் சுதந்திரதினமான இன்றையதினம் வடக்கின் சில மாவட்டங்களில் போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டமையுடன் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் சங்கத்தினரும் போராட்டங்களை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.