சீனாவில் இருந்து வரும் சிகிச்சை முறைகளில் தற்போது தீ சிகிச்சை மக்களின் கவனத்தை பெற தொடங்கியுள்ளது.
மருத்துவ உலகின் நான்காவது புரட்சியான இந்த சிகிச்சையின் மூலம் மன அழுத்தம், அஜீரணம், மலட்டுத் தன்மை, புற்றுநோய் போன்றவற்றை குணப்படுத்த முடியும்.
இந்த சிகிச்சை மேற்கத்திய மருத்துவ முறைகளை மிஞ்சியது என கூறும் சாங் பென்ஹாவோ ஒரு மணி நேர சிகிச்சைக்கு 300 யுவான் கட்டணமாக பெறுகின்றார்.
இச்சிகிச்சையில் நபர் ஒருவரை படுக்க வைத்து அவரது முதுக்குபுறத்தில் மூலிகை மருந்து ஒன்றினைத் தடவி, துணியினால் மூடி அதன்மேல் தண்ணீரும், 95 சதவிகிதம் அல்கஹோலையும் தேய்த்து பற்ற வைக்கின்றார்.
அப்போது நோயாளி அமைதியாய் படுத்திருக்க, தீச்சூடர் அவர் உடலின் வலி மிக்க இடங்களில் பரவி, வலியை அகற்றுகின்றது.
இதுகுறித்து சாங் பென்ஹாவோ கூறுகையில், இந்த சிகிச்சையை பெறுபவருக்கு வலி ஏதும் இருக்காது, வெப்பத்தை மட்டுமே உணருவார் என்றும் இத்தகைய சிகிச்சையினால் அறுவை சிகிச்சைகளைத் தவிர்க்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
உடலில் உள்ள வெப்ப, குளிர் நிலைகளை சமமாகப் பராமரிப்பதன் மூலம் சுகாதாரமாக வாழ முடியும் என்ற சீன நாட்டுப்புற நம்பிக்கைகள் அடிப்படையில் இந்த சிகிச்சைமுறை செயல்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.
எனினும் இந்த சிகிச்சை முறை குறித்து எந்தவிதமான சரியான மருத்துவ சான்றுகள் இல்லாமல் இருப்பது சற்று அபத்தானதாக கருதப்படுகிறது.






