அம்பாறை-நிந்தவூர் பெரிய ஜும்ஆ பள்ளிவாசல் முன்பாக சட்டவிரோதமாக வீதிகளில் பயணித்த இரு இளைஞர்கள் விபத்துக்குள்ளாகியுள்ளனர். இச்சம்பவம் நேற்று (03.02.2024) இடம்பெற்றுள்ளது.
இரு இளைஞர்களும் மேலும் இருவருடன் நிந்தவூர் வைத்தியசாலை வீதியிலிருந்து பிரதான வீதியினை நோக்கி மோட்டார் சைக்கிள-ஓட்டப்பந்தயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது,மோட்டார் சைக்கிளானது வேகக் கட்டுப் பாட்டினை இழந்தமையினால் ஜும்ஆ பள்ளிவாசல் சுவர் பகுதியில் மோதி இரு இளைஞர்கள் பலத்த காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில், காயமடைந்தவர்கள் நிந்தவூர் ஆதார வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நிந்தவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.